Wednesday, 20 February 2013

வினா இல்லா விடை....

புனித வெண்ணிற ஒளியே!
நிறமில்லா மழைநீர் துளியே!
உன்னால் எவ்வாறு உருவானதோ ஏழ் வண்ண வானவில்?!

விதையில்லாமல் மரம் என்பதேது
விடையில்லாமல் வினா ஒன்றேது?

வாழ்க்கை என்பதே கேள்வியாயின்
உயிரின் பிரிவு தான் உரிய பதிலோ?

கேள்விக்குறியின் கீழே முற்றுப்புள்ளி உள்ளதே
என்றால் இரண்டும் ஒரு பொருள் தானோ?!

No comments:

Post a Comment