Monday, 25 June 2012

கானல் நீர்....

வேண்டிய வரங்கள்செய்த நற்பணிகளின் பயனாய்
மேற்கொண்ட மா தவத்தின்  பலனாய்
தாயின் கருவில் குடியிருந்து
பிறந்த அன்றே பலரால் புறக்கணிக்கப்பட்டு
குடும்பத்திற்காக சில கனவுகளைப் புதைத்து
சமூகம் வரைந்த கோட்டிற்குள் தன் கோட்பாடுகளைச் சுருக்கி
பசுவைக்க் கட்டிப்ப் போட்டு
அது உலவும் பரப்பளவே பெரும் சுதந்திரம் என்று எண்ணுவது போல்
தனக்குக் கிடைத்த இந்த அளவான உரிமையை பெரும் சுதந்திரம் என்று எண்ணி
தன் வாழ்வை நிலைநிறுத்த கல்வியில் போராடி
பிற இன ஆளுமையையும் அடக்குமுறையையும் உடைத்தெறிந்து பணியில் தன்னை நிலை நாட்டி
பனிப்போல் உருகும் மனதையும் பாறையாக்கி
அப்பாறையை உருக்குலைத்து தேரை போல் நுழையும் காதலுக்கு உண்மையாகி
காதலுக்காக தனக்குப் பிடிதவையை துறந்து
காதலித்து பெற்றோரைக் காயப்படுதிய வலியையும் காதலனை புண்படுத்தாமல் இருக்க அவனிடமிருந்து மறைத்து
பயணிக்கும் பொழுதும் உறங்கும் வரையும் கண்ணீரே துணையென கருதி
விடிந்ததும் சோகங்களை மறைத்து புன்னகை புரிந்து அரிதாரம் பூசி
தூரத்திலிருந்து காணும்போது அனைத்தும் நலமாய் தண்மையாய் இருந்தாலும் 
அருகில் செல்லசெல்ல மெதுவாய் மறைந்து
இவற்றைப்போன்ற சோகங்கள் பல நிறைந்திருக்கும் வெற்றிடமாய்க் காட்சியளிக்கும்
ஒவ்வொரு பெண்ணின் வாழ்வும் ஒரு கானல் நீரே!
கடவுள் இவளது தியாகத்தை கண்டு அவள் வேண்டிய வரங்கள் அனைத்தையும் கொடுத்தார்!
அவளது புகழை உலகம் உணர செய்தார்!

2 comments: