Saturday, 18 August 2012

உன் கண்கள்

மாலை வேளை தொடங்கும் நேரம்
சாலை ஓரம் நீ கதிருப்பதின் சாரம்
காண்பவர்க்குக் கண்கள் இரண்டு போதாது
உன் குழந்தைக்கங்களிருந்து வெளிப்படும் வெகுளிப் பார்வையைக்காண
காணும் மாத்திரத்திலேயே வந்து அள்ளிக்கொள்ளத் தோன்றும்
அக்கண்களை நினைத்தால் மனம் கொள்ளை போகும் இன்றும்
உன் கண்களைக் கண்டால் கல்லும் கரையும்
என் மனம் வெறும் மண் தானே!
மணித்துளிகள் கழிந்தாலும் தலைவனின் மனக்கவனம் பிறரிடத்தே சென்றாலும்
என்னே உன் பொறுமை! என்னே உன் நம்பிக்கை அவரிடத்தில்!
தேனீர் விடுதியில் காத்திருக்கும் நான்கு கால் செல்லப்ராணியே!

4 comments:

  1. oru dog ah rasika unnala than de mudiyum;)

    ReplyDelete
  2. Nice poem. Did not expect the twist in the end :) Good job,Keep writing!!

    Sindhuja

    ReplyDelete
  3. @Sowmiya he he semma azhaga irukkum de :)innocent face :)

    ReplyDelete